tamilnadu

img

ஐபிஎல் 2019 : 10 ரன்களில் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

கொல்கத்தாவில், ஐபிஎல் போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா அணியை வீழ்த்தி 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 35-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. இதில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் சதம் அடித்தார். மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். 

இதனை அடுத்து, 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நிதிஷ் ரானா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். ஆண்ட்ரு ரசல் 25 பந்தில் 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா 46 பந்தில் 85 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். 

இதன் மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 9 போட்டிகளில் 4 வெற்றிகள், 5 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதேசமயம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி 9 போட்டிகளில் 2 வெற்றிகள், 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் உள்ளது.


;