tamilnadu

img

ரஞ்சி கோப்பை : தமிழ்நாடு திணறல்

நாட்டின் மிகப்பெரிய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் தற்போது 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.  எலைட் ஏ,பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் கர்நாடக அணியிடம் தோல்வி கண்ட நிலையில், 2-வது  ஆட்டத்தில்  இமாச்சல் அணியை எதிர்கொண்டது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற  தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தமிழக வீரர்களின் அசத்தலான  பந்துவீச்சால், இமாச்சல் அணி முதல் இன்னிங்ஸில் 158 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணி ஒரே செஷனில் 96 ரன்களுக்கு சுருண்டு உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இமாச்சல் அணி 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது.