tamilnadu

img

பரபரப்பான கட்டத்தில் தகுதி சுற்றுகள்

டி-20 உலகக் கோப்பை தொடரின் 7-வது சீசன் அடுத்தாண்டு அக்டோபர் மாதம்  ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள்  விளையாடுகின்றன. டி-20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள ஆறு இடங்களுக்கான  அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் துபாய் மற்றும் அபுதாபியில் தற்போது நடைபெற்று வருகிறது. 

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தகுதி சுற்று ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா, அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் தகுதி பெற்றன. புதனன்று நெதர்லாந்து, நமீபியா அணிகள் உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்னும் பிளே ஆப் சுற்றுப் பாக்கி உள்ளது. இந்த ஆட்டங்களில் வெற்றி பெரும் அணிகள் (2) உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும்.