tamilnadu

img

பாக்., வீரர் வஹாப் ரியாஸ் ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி யின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் டெஸ்ட் போட்டியி லிருந்து தற்காலிக ஓய்வு அறிவித்துள்ளார்.   வஹாப் ரியாஸின் இந்த தற்காலிக ஓய்வு முடிவுக்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை என்றாலும், ஒருநாள், டி-20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்து வதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ள தாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.   34 வயதாகும் வஹாப் ஒருநாள் ஆட்டங் களில் கடந்த இரு வருடங்களாக விளை யாடாமல் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் களமிறங்கினார். பார்ம்,  உடல்தகுதி பிரச்சனையில் அடிக்கடி சிக்குவதை  வாடிக்கையாகக் கொண்டவர் வஹாப். இந்த இரண்டு பிரச்சனைகள் இல் லாத சமயத்தில் அருமையாகப் பந்து வீசு வார். இங்கிலாந்து உலகக்கோப்பை தொட ரில் வஹாப் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.