tamilnadu

பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு

வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு வராததற்கு இந்தியா தான் காரணம் 

பாகிஸ்தான் மண்ணில் வரும் ஜனவரி மாதம் 2 டெஸ்ட், 3 டி-20 என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் வங்கதேச கிரிக்கெட் அணி விளையாட இருந்தது.  ஆனால் பாதுகாப்பு பிரச்சனை அதிகமாக இருப்பதால் அந்த தொடரை பொதுவான இடத்தில் நடத்துமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குக் கோரிக்கை விடுத்தது. மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன்,”எங்கள் அணியின் முன்னணி வீரர்கள் பலர் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட மறுத்துவிட்டார்கள்” எனக் கூறி இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி,”வங்கதேச அணி பாகிஸ்தான் வர மறுத்ததற்கு இந்தியாவின் தலையீடு தான் காரணம் எனவும், வங்க தேச கிரிக்கெட் நிர்வாகிகள் தாங்க ளாகவே முடிவெடுக்குமாறு” வலி யுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “இலங்கை அணி எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாடி யதற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். பாகிஸ்தான் மண்ணில் பாதுகாப்புடன் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதால் இங்கு கிரிக்கெட் விளை யாட்டுக்குச் சரியான சூழல் உள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளவில்லை. இதேபோல வங்கதேச வீரர்களை நாங்கள் வரவேற்கத் தயாராக உள்ளோம். தொடக்கத்தில் அவர்கள் சுற்றுப்பயணம் செய்யத் தயாராக இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் இந்தியாவின் அழுத்தம் ஒரு தடையாக இருப்பதை நான் நிரூபிக்கிறேன். வங்க தேச கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பற்றி சுயமாக  முடிவு எடுக்க வேண்டுமே தவிர சர்வதேச விளையாட்டுகளில் அரசியலில் ஈடுபடக்கூடாது” எனக் கூறினார். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு கிரிக்கெட் துறை பக்கம் நகருமா? இல்லை இருநாட்டு அரசியல் துறைக்குத் திரும்புமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
 

;