tamilnadu

img

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் நியூஸிலாந்து கைப்பற்றியது

நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளை யாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸி லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் சனியன்று நடைபெற்றது.     டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி குப்தில் (79), ராஸ் டெய்லர் (73) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தின் உதவியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப் பிற்கு 273 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி னார்.  274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின மான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நியூஸிலாந்து வீரர்களின் அசத்தலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 96 ரன்களில் மிடில் ஆர்டரை இழந்தது. மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் அய்யர் (52) மட்டுமே சொதப்பல் இல்லாமல் விளையாடினார்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் சொதப்ப ஜடேஜா - நவதீப் சைனி ஜோடி அணியை கரைசேர்க்கும் முனைப்பில் துடிப்பாக விளையாடி அசத்தலாக ரன் சேர்த்தது. குறிப்பாக ஜடேஜா நியூஸிலாந்து பந்து வீச்சை பந்தாடினார். சைனி (45) - ஜடேஜா (55) ஆட்டமிழக்க இந்திய அணியின் இன்னிங்ஸும் முடிவுக்கு வந்தது.  இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 2-வது கடும் போராட்டத்துடன் வெற்றியைக் கோட்டை விட்ட இந்திய அணி நியூஸிலாந்து அணி யிடம் ஒருநாள் தொடரை இழந்தது.