அடுத்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக் கோப்பை தொடரின் 7-வது சீசன் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் விளையாடுகின்றன. டி-20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள ஆறு இடங்களுக்கான அணிகள் தேர்வு தகுதிச்சுற்று மூலம் நடத்தப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வியாழனன்று நிறைவு பெற்ற தகுதிச்சுற்று ஆட்டங்களில் பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் குரூப் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் டி-20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் பட்டியலை ஐசிசி வியாழனன்று வெளியிட்டது.
அணிகள் விபரம்
1. இந்தியா
2. இங்கிலாந்து
3. தென் ஆப்பிரிக்கா
4. ஆஸ்திரேலியா
5. நியூஸிலாந்து
6. பாகிஸ்தான்
7. இலங்கை
8. ஆப்கானிஸ்தான்
9. வங்கதேசம்
10. மே.இ. தீவுகள்
11. ஓமன்
12. அயர்லாந்து
13. நெதர்லாந்து
14. நமீபியா
15. ஸ்காட்லாந்து
16. பப்புவா நியூ கினியா