tamilnadu

img

இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஓய்வு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான், இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2003இல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் அறிமுகமானார். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக இதுவரை 29 டெஸ்டில் பங்கேற்று 100 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 120 ஒருநாள் போட்டியில் 173 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, 24 டி-20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட் சாய்த்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாறு படைத்தவர். கடந்த 2007 இல் நடந்த முதல் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் பதான் இடம் பெற்றிருந்தார். அந்த தொடரின் ஃபைனலில் 4 ஓவர்கள் வீசிய பதான் 16 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கடைசியாக இவர் கடந்த 2012இல் நடந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இர்பான் பதான் இன்று கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

;