கிரிக்கெட் உலகின் தாதாவும், இந்திய அணியின் முன் னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக பணியாற்றி வருகிறார். அதி ரடி மனப்போக்கை கொண்ட கங்குலி குறுகிய காலத்தில் பல திட்டங்களுடன் இந்திய கிரிக்கெட்டை நடுங்க வைத்து வருகிறார். கடந்த மூன்று மாத கால மாக இந்திய கிரிக்கெட் உல கம் கங்குலியின் அதிரடியில் சிக்கி புதிய வளர்ச்சி கண் டுள்ள நிலையில், அடுத்து சர்வதேச கிரிக்கெட் உல கிற்கும் தன்னுடைய தனது மாஸ்டர் பிளானை (திட்டம்) தொடங்க திட்டமிட்டுள்ள தால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) செய்வதறி யாது திகைப்பில் உள்ளது.
கங்குலியின் சர்வதேச திட்டம்
ஐசிசி-யில் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியங்களான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து 2021-ஆம் ஆண்டு சூப்பர் சீரிஸ் என்ற பெயரில் 4 நாடுகள் (இந்தியா, ஆஸி., இங்கி., மற்றும் டாப் 4-இல் ஒன்று) பங்கேற்கும் உலக தொடர் நடத்தத் திட்டமிட்டுள் ளன. இந்த திட்டத்தைத் தயா ரித்தவர் கங்குலி தான். இந்த தொடர் ஐசிசி நடத்தும் பிரம் மாண்ட தொடர்களைப் போலவே இருக்கும் எனச் செய்திகள் வெளியாக ஐசிசி கோபத்திலும், அதிர்ச்சி யிலும் உள்ளது. தற்போது இந்த தொட ருக்கான திட்டங்களைச் செயல்படுத்த ஆஸ்திரே லியா, இங்கிலாந்து கிரிக் கெட் வாரியங்களிடம் கங் குலி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கு முதலில் சம்மதித்த இங்கிலாந்து வாரி யம் மற்ற உறுப்பு நாடுகளு டன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.