tamilnadu

img

கலைகிறது தில்லி கிரிக்கெட் சங்கம்?

நாட்டின் பெரிய கிரிக்கெட் சங்கங்களுள் ஒன்றான தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியைப் போன்று பரபரப்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் வாய்த்தகராறு கைகலப்பு வரை சென்று கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஒருவரையொருவர் சரமாரி யாகத் தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் சம்பவம் சமூகவலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.  மோதல் சம்பவத்தைக் கருப்பொருளாக வைத்து,”தில்லி கிரிக்கெட் சங்கத்தைக் கலைக்க வேண்டும்” என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், தில்லி பகுதி எம்பி.,யுமான கவுதம் கம்பீர் பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் தில்லி கிரிக்கெட் சங்க உறுப்பினர்களின் ஒரு கோஷ்டி கம்பீர் தலைவராகத் தேர்வாகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.தில்லி கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தில்லி கிரிக்கெட் சங்கம் விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

;