tamilnadu

img

தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் (50 ஓவர்) தொடரான விஜய் ஹசாரே டிராபி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டிற்கான விஜய் ஹசாரே டிராபி வரும் செப்டம்பர் 24 முதல்  அக்டோபர் 16-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் தமிழக அணியின் கேப்டனாக அனுபவ வீரரும், இந்திய அணியின் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.