tamilnadu

img

தோனிக்கு முதலிடம்

உலகின் மிக ஆபத்தான பிரபலங்கள் பட்டியல் 

மெக்காஃபி என அழைக்கப்படும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது உலகளா விய கணினி பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2019-ஆம் ஆண்டிற்கான மிக ஆபத்தான பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.   

டாப்-10 

1. தோனி (கிரிக்கெட்) 
2. சச்சின் தெண்டுல்கர் (கிரிக்கெட்)
3. கவுதம் குலாட்டி (சினிமா) 
4. சன்னி லியோன் (சினிமா) 
5. பாட்ஷா
6. ராதிகா ஆப்தே  (சினிமா) 
7. ஷ்ரத்தா கபூர்  (சினிமா) 
8. ஹர்மன்பிரீத் கவுர்  (கிரிக்கெட்)
9. பி.வி. சிந்து (பேட்மிண்டன்) 
10. ரொனால்டோ (கால்பந்து) 
 

மெக்காஃபி பட்டியல் எப்படி தயாராகுகிறது? 

தற்போதைய நவீன உலகில் தேடுதல் செயலியான கூகுள் தளத்தின் அசுர வளர்ச்சி நாளுக்கு நாள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நெட்டிசன்கள் எனப்படும் ஆன்லைன் ஆர்மிகள் தினமும் 4 மணிநேரமாவது தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் படங்கள், விளையாட்டு நிகழ்வுகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற தகவல்களைத் தேடுகிறார்கள். இந்த தேடுதலின் போது உண்மையான தகவல் மட்டுமின்றி தீங்கு விளைவிக்கும் வலைத்தளங்கள் தவறான மற்றும் அபாயகரமான செய்தியைத் தகவலும் சேர்ந்து வெளியிடுகின்றன. இதனை நெட்டிசன்கள் உண்மையானது என நம்பி டிரெண்டிங் செய்கிறார்கள். இவ்வாறு மேற்குறிப்பிட்ட நபர்கள் பற்றி அபாயகரமான தகவல்கள் அதிகம் பரவுகின்றன. மெக்காஃபி நிறுவனத்தின் தொழில் சைபர் கிரைம் என்பதால் அதனை ஆராய்ந்து ஆண்டுதோறும் இந்த பட்டியலை வெளியிட்டுவருகிறது.