tamilnadu

img

ஆறுதல் வெற்றி பெறுமா நியூஸி.? இன்று கடைசி டி-20 ஆட்டம்

இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு தற்போது டி-20 தொட ரில் விளையாடி வருகிறது.    5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் முதல் 4 ஆட்டங்களில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், 5-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான மவுண்ட் மவுங்கானுயில்  உள்ள பே ஒவல் மைதானத்தில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது.   நியூஸிலாந்து அணியை ஒயிட் வாஷ் முனைப்பில் இந்திய அணி யும், ஆறுதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் நியூஸிலாந்து அணி யும் என இரு அணிகளும் வெற்றிக் காக வரிந்து கட்டுவதால் கடைசி டி-20 போட்டி பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

இந்தியா - நியூஸிலாந்து 
இடம்: பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய் 
நேரம்: மதியம் 12:30 மணி 
சேனல்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மெயின், தமிழ்)

;