tamilnadu

img

விராட் கோலியை பாகிஸ்தானியர்களும் நேசிக்கிறார்கள்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களி லும் அவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஷ் கான் இந்திய ரசிகர்கள் பெருமைப்படும் விதமாக ஒரு கருத்தைக் கூறியுள்ளார். அதில்,”பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலரும், விராட் கோலியை போல் விளையாட ஆசைப்படுகிறார்கள். அவருடைய உடல் மொழியைப் பின்பற்றுவதை விரும்புகின்றனர். இந்தியாவைப் போன்று பாகிஸ்தானிலும் கோலிக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.