tamilnadu

img

சன்ரைசர்ஸ் துணைப் பயிற்சியாளராக பிராட் ஹாடின்

ஐபிஎல் தொடரில் பல மான அணிகளில் ஒன்றான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  2020-ஆம் ஆண்டு சீசனுக்கு தயாராகும் வகையில் பல அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் முதல் பகுதியாக தலைமை பயிற்சி யாளராக இருந்த டாம் மூடியை (ஆஸ்திரேலியா) நீக்கிவிட்டு, பேலிஸை (இங்கிலாந்து) புது பயிற்சியாளராக நியமித்தது.  இந்நிலையில் துணைப்பயிற்சி யாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் (41) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சன்ரைசர்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  அதிரடி பேட்டிங்குகிற்கு பெயர் பெற்ற பிராட் ஹாடின் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியின் பீல்டிங் (2016) பயிற்சியாளராகவும், தொடர்ந்து துணைப்பயிற்சியாளராகவும் (2017) பணியாற்றிய அனுபவம் உடைய வர் என்றாலும் பேட்டிங்கை விட பீல்டி ங்கில் (விக்கெட் கீப்பிங்கில்) சிறப்பான அனு பவம் பெற்றவர். கில்கிறிஸ்ட் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பி  ஆஸ்திரேலிய அணிக்கு பல்வேறு வகையில் உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.