உலகக்கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணிக்கு மற்ற அணிகளைப் போல பார்ம் பிரச்சனை அதிகம் கிடையாது என்றாலும், காயம்தான் அந்த அணியை வாட்டி வதக்கி வருகிறது. முன்னணி பேட்ஸ்மேன் ஷேன் மார்ஷ் வலைப்பயிற்சியின் போது கையில் பந்து தாக்கியது. மருத்துவ அறிக்கையின் படி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கவாஜா தென் ஆப்பி ரிக்காவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் காயமடைந்தார். கவாஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் (தொடை பகுதியில்) குணமாக நான்கு வாரம் ஆகும் என மருத்துவ அறிக்கை கூறப்பட்டுள்ள நிலையில், மேத்யூ வேட் மாற்று வீரராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார். மார்கஸ் ஸ்டாய்னிஸும் காயத்துடன் தான் விளை யாடி வருகிறார். அவரும் விலக நேர்ந்தால் நிலைமையைச் சமாளிக்க மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து காயத்தால் விலகிவருவதால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.