tamilnadu

img

ஆஷஸ் 2-வது டெஸ்ட்... இன்று தொடக்கம்

“சாம்பல் போர்” என அழைக்கப்படும் வர லாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடரின் நடப் பாண்டுக்கான சீசன் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுவருகிறது.   5 போட்டிகளைக் கொண்ட பெரிய டெஸ்ட் தொடராக இருந்தா லும் கோப்பையின் அளவு வெறும் 6 இன்ச் தான். அந்த சின்னஞ்சிறிய கோப்பைக்காக இங்கிலாந்து, ஆஸ்தி ரேலியா வீரர்கள் முரட்டுத்தனமாக மோதிக் கொள்வார்கள். சண்டை சச்சரவு, காயம் இல்லாமல் ஆஷஸ் தொடர் நிறைவுபெற்ற  வரலாறு கிடையாது.  இத்தகைய சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து  அணியை புரட்டி யெடுத்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் புதனன்று தொடங்கு கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பந்தாடிய ஆஸ்திரேலிய அணியைப் பழிவாங்கும் முனை ப்பில் இங்கிலாந்து அணியும், 2வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என வெற்றிக்காக இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி பரபரப் பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இடம் : லண்டன் (லார்ட்ஸ்)/நேரம் : பிற்பகல் 3:30 மணி (இந்திய நேரம்)