tamilnadu

img

சூப்பர் ஓவர் விதிமுறையில் அதிரடி மாற்றம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) சூப்பர் ஓவர் முறையில் அதிரடி மாற்றம் செய்து அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. புதிய விதிமுறையின்படி  சூப்பர் ஓவரும் டை-யில் நிறைவடைந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும் விதி நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தால் இறுதி முடிவு எட்டும்வரை சூப்பர் ஓவர்கள் (எத்தனை முறை வேண்டுமானாலும்)  தொடர்ந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.