நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளசுகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மிக மோசமான வழிமுறையைப் பின்பற்றுவார்கள். அதாவது தனக்குப் பிடித்த விளையாட்டில் அதிக கவனம், ஆர்வத்து டன் ஆதிக்கம் செலுத்துவார்கள். அவ்வாறு ஆர்வமாக இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கடுமையாகப் போராடி வெற்றியைக் குவிப்பார்கள். ரசிகர்களும் வெறித்தனமாக போட்டியை ரசிப்பார்கள். ஆனால் உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டியில் சொதப் பினால் அடுத்த 2 மாத காலத்திற்கு ரசிகர்களும், போட்டியில் பங்கேற்ற வீரர்களும் தோல்விகண்ட விளையாட்டுப் போட்டியைப் பற்றிக் கண்டு கொள்ளமாட்டார்கள். தற்போதைய விளையாட்டு உலகில் நெதர்லாந்து அணி கால்பந்து, ஹாக்கி, பனி (ஐஸ்) தொடர்பான விளை யாட்டுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.