tamilnadu

img

சிறப்பு சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து

தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு 

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புச் சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து தொடர் (15-25 வயதுக்குட்பட்டவர்கள்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.   சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மனோரஞ்சனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், ”மாற்றுத்திறனாளி குழந்தைகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. தினேஷ்குமார், பிரேம் சங்கர், கெவின்ஜார்ஜ் ஆகிய திறமையான வீரர்கள் இருந்தும் தேர்வு செய்யப்படவில்லை. தகுதி யானவர்களைத் தேர்வு செய்யும் வகையில் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.அதுவரை போட்டியை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்” என வழக்கு தொடர்ந்தார்.     அவசர கால வழக்காக விசாரித்த வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் அமர்வு வழங்கிய தீர்ப்பில்,”மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நடத்தப்படும் இந்த சர்வதேச போட்டியை நிறுத்தி னாலோ, தள்ளிவைத்தாலோ மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோய் விடும். என்பதால் போட்டியைத் தள்ளிவைக்க முடியாது. மனுதாரர் கோரிக்கையை ஏற்று தினேஷ்குமார், பிரேம் சங்கர், கெவின்ஜார்ஜ் ஆகியோரை சேர்த்துக் கொள்ள வேண்டும்” எனப் போட்டி அமைப்பாளர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;