tamilnadu

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் முகுருசா

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்று புதனன்று நிறைவு பெற்றது.  

ஆடவர் ஒற்றையர் 

ஆடவர் ஒற்றையர் 3-வது காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் சுவிஸின் வாவ்ரிங்கா (16-வது இடம்), தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவை எதிர்கொண்டார். தொடக்க செட்டில் மட்டும் ஆதிக்கம் செலுத்திய வாவ்ரிங்கா கடைசி 3 செட்களை பறிகொடுத்து அதிர்ச்சி தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறினார். ஜுவரேவ் 1-6, 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் 

மகளிர் ஒற்றையர் 3-வது காலிறுதி ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற ஸ்பெயினின் முகுருசா ரஷ்யாவின் அனஸ்டாசியவை எதிர்கொண்டார்.  தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய முகுருசா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  கடைசி காலிறுதி ஆட்டத்தில் பட்டம் வெல்பவராக கருதப்படும் ருமேனியாவின் ஹாலேப் எஸ்டோனியாவின் கோன்டாவெயிட்டை 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆக்ரோஷமாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

 

;