tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

கால்பந்து விளையாட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட கண்டம் ஐரோப்பா என்றாலும், அந்த விளையாட்டை அதிகம் நேசிக்கும் கண்டம் ஆப்பிரிக்கா தான். இதற்குக் காரணம் கால்பந்து விளையாட்டை அவர்கள் உயிருக்கு உயிராகக்  காதலுடன் கூடிய விருப்பத்துடன் விளையாடுவார்கள், ரசிப்பார்கள். குறிப்பாக தாங்கள் விரும்பிய அணி கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இருக்கையில் அமராமல் ஒவ்வொரு நிமிடமும் அணி வீரர்களை உற்சாகமூட்டுவார்கள். தங்கள் அணி தோற்றாலோ அல்லது வேறு அணியைச் சேர்ந்தவர்கள் கிண்டல் செய்தாலோ கால்பந்து மைதானத்தைக் கலவர பூமியாக மாற்றி விடுவார்கள்.