tamilnadu

img

கூடுதல் தடை

மெஸ்சியை அச்சுறுத்தும் கோபா அமெரிக்கா

தென் அமெரிக்க நாடு களின் கால்பந்து உலகக்கோப்பை என அழைக்கப்படும் கோபா அமெரிக்கா தொடர் சமீ பத்தில் நிறைவு பெற்றது. இந்த தொடரின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் அர்ஜெண்டினா, சிலியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது. களத்தில் மெஸ் சிக்கு எத்தகைய இடர்பாடு ஏற்பட்டாலும் கோபப்படா மல் சமத்துப் பிள்ளையாக விளையாடும் பெருமைக்கு உரியவர்.  ஆனால் சிலி அணிக்கெதி ரான ஆட்டத்தில் மெஸ்சிக்கு என்ன ஆனதோ தெரிய வில்லை திடீரென கோபப் பட்டுச் சிவப்பு அட்டை பெற் றுள்ளார். விஷயம் என்ன வென்றால் சிலி வீரர் மெடல் மெஸ்சியை இடித்து வம்புக்கு இழுத்தார். பதி லுக்கு மெஸ்சி மெடலை தலையால் கோபத்தில் முட்ட முற்பட்ட பொழுது இருவ ருக்கும் கைகலப்பு ஏற்பட் டது. மோதல் போக்குக்கு மெஸ்சி தான் காரணம் என்று நடுவர் சிவப்பு அட்டையைக் கொடுத்து கள நடுவர் வெளி யேற்றினார். சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டதால் ஆத்திர மடைந்த மெஸ்சி வார்த்தை களால் நடுவரை வறுத்தெ டுத்தார்.   போட்டி நிறைவு பெற்ற பிறகு மெஸ்சி “இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது” எனப் பகிரங்க மாகக் குற்றம் சாட்டினார். மேலும் மூன்றாவது இடத் திற்கான வெண்கல பதக் கத்தையும் வாங்க மெஸ்சி மறுத்தார்.  

மெடலுடன் மோதல் மற் றும் நடுவரை வசைபாடிய விவகாரம் தொடர்பாகத் துரித விசாரணையில் களமி றங்கிய கோபா அமெரிக்கா நிர்வாகம் (ஜூலை 24-ஆம் தேதி அன்று) மெஸ்சிக்கு ஒரு போட்டியில் (சர்வதேச) விளையாடத் தடை மற்றும் 1,500 டாலர் (1 லட்சம் ரூபாய்)  அபராதமும் விதித்தது.  இந்நிலையில், பதக்கம் வாங்க மறுத்த விவகாரம், பிரேசில் மற்றும் கோபா நிர்வாகத்தை விமர்சித்தது தொடர்பான விசாரணை சனி யன்று நடைபெற்றது. விசா ரணை முடிவில் மெஸ்சிக்கு 3 மாத சர்வதேச தடையும் 50,000 டாலர் (ரூ  3.4 கோடி) அபராதமும் விதிக்கப்பட் டுள்ளது. தடையை எதிர்த்து மெஸ்ஸி மற்றும் அர்ஜெண் டினா அணி நிர்வாகம் மேல் முறையீடு செய்யலாம்.  மேல் முறையீட்டில் தடை நீக்கப்படாவிட்டால் செப்டம் பர் மற்றும் அக்டோபர் மாதங் களில் சிலி, மெக்ஸிகோ, ஜெர்மனி அணிகளுடனான சர்வதேச போட்டிகளில் மெஸ்சி பங்கேற்க முடியாத நிலை உருவாகும்.

;