tamilnadu

தேசம் காப்போம் பேரணி: திருச்சியில் விசிக நடத்துகிறது

காஞ்சிபுரம், ஜன. 28 - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவள வன் காஞ்சிபுரத்தில் செவ்வாயன்று (ஜன.28) செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், என்பிஆர், என்ஆர்சி பதிவேடுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சார்பில் வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி திருச்சிராப் பள்ளியில் தேசம்  காப்போம் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டுள் ளது .இந்த வழக்கில் பாமக வை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்துள்ளதாக கிடைத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பெரியார் பெயரைச் சொல்லி உருவான இயக்கங்களும் பாமகவும் ஒன்று.     பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து குடி உரிமை சட்டத்திற்கு ஆதரவாக  மாநிலங்களவையில் பாமக வாக்களித்தது. இப்போது பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்கு அந்தக் கட்சி தொண்டர் கள் சென்றிருக்கிறார்கள் என்பது தமிழக அரசியல் எவ்வளவு ஆபத் தான திசையில் போய்க்கொண்டி ருக்கிறது என்பதை அறியமுடிகிறது.  தமிழ்நாடு அரசு இதை வேடிக்கை பார்க்கக்கூடாது. சங் பரிவார் அமைப்புகளின் வன்முறை பேச்சுக்களால் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்களின் சிலைகளை அவமதிப்பதும், உடைப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எனவே, இதனை தடுப்பதற்கு தனிப்படை அமைத்திட வேண்டும். இந்த சந்திப்பின் போது, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ், மண்டலச் செயலாளர் சூக.விடுதலை செழியன் உட்பட பலர் இருந்தனர்.

;