tamilnadu

தேர்தல் விதிகளை காட்டி போராட அனுமதி மறுப்பதா தேர்தல் அதிகாரியிடம் சிபிஎம் புகார்

காஞ்சிபுரம், மே - நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குபதிவு முடிந்த பிறகும் அரசியல் கட்சிகள், தெழிற் சங்க அமைப்புகள், மக்கள் சேவை அமைப்புகள் பொதுக்கூட்டம், அரங்க கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவை நடத்துவதற்கு தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி கெடுபிடி செய்யப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களின் கோரிக்கைகளுக்காக போராட முடியாத நிலை உள்ளது.மேலும், திருமண மண்டபங்கள், ஒலிபெருக்கி, அச்சக உரிமையாளர்களை அச்சுறுத்துவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் வாக்குபதிவு முடிந்தும், மற்ற மாநில தேர்தலை காட்டி கெடிபிடியில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல.எனவே, மாநில தேர்தல்அலுவலகமும், மாவட்டநிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், பேச்சுரிமை, கருத்துரிமையை பயன்படுத்திட எவ்வித இடையூறும் இல்லாமல் உரிய அனுமதி வழங்க வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

;