திருவண்ணாமலை, பிப். 3- திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி பொதுமக்களிடம் மோசடியாக பணம் வசூலித்து ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், செய்யாரை தலைமையிட மாக கொண்டு விஆர்எஸ் என்ற பெயரில் நிதி நிறு வனம் செயல்பட்டு வந்தது. வந்தவாசி, ஆரணி, சேத்துப்பட்டு, போளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் அந்த நிறுவனம் நூற்றுக் கணக்கான முகவர்கள் மூலம், ஆயிரக்கணக்கான மக்களிடம் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி பல நூறு கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அந்த பணத்தை உரிய வர்களுக்கு திரும்பி வழங்காமல் ஏமாற்றியுள்ள னர். மோசடி செயலில் ஈடுபட்ட விஆர்எஸ் நிறு வனத்தின் மீது உரிய நட வடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு அவர்கள் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எஸ்.ராம தாஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அப்துல் காதர், குமரன் மற்றும் முகவர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.