tamilnadu

அரசு மருத்துவமனையில் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

செங்கல்பட்டு, ஏப்.24-செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய் சிகிச்சைக்கு தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தொற்றா நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா செவ்வாயன்று (ஏப்.23) நடைபெற்றது. விழாவுக்கு, மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவம் தலைமைவகித்து, சிறப்பு சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில்,‘ சைலண்ட் கில்லர்’ எனப்படும், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் போன்ற நோய்களால்ஏற்படும் இறப்புகளைதடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைஎடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே மருத்துவமனையில், தொற்றாநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும், 30 வயதுக்கு மேற்பட்டஅனைவருக்கும் இம்மையத்தில், சர்க்கரை, ரத்தக்கொதிப்புக்கு பரிசோதனை செய்யப்படும். இந்த புதிய பிரிவில் இரு மருத்துவர் தலைமையில், இரண்டு செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.

;