காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாலர் சங்கம் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பரிசு வென்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சி நகர செயலாளர் சி.சங்கர் ஒருங்கிணைப்பில் திரளான குழந்தைகள் இதில் பங்கேற்றன.