tamilnadu

காஞ்சிபுரம் கோவில் பல்லக்கில்  வெள்ளித் தகடு மாயம்....

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பல்லக்கிலிருந்து வெள்ளி தகடு மாயமானது கண்டறியப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் நகைகள் மாயமானதாக பக்தர்கள் தொடர்சியாக இந்து அறநிலைய துறையிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் நகை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கோவிலில் இருந்த  வெள்ளி பல்லக்கில் இருந்த வெள்ளி தகடுகள் பெயர்க்கப் பட்டு வெறும் பலகை மட்டுமே இருந்ததை கண்டு நகை சரிபார்ப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது தொடர்பாக இந்து அறநிலைய துறையிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.ஏற்கனவே ஏகாம்பரநாதர் திருக்கோவில் சோமாஸ் கந்தர் சிலை செய்வதில் தங்க முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.