காஞ்சிபுரம், பிப்.2- தமிழகத்திலேயே முதல் முறையாக காவலர் நண்பர்கள் குழுவில் காஞ்சி புரம் மாவட்டத்தில் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப் பாளர் சாமுண்டீஸ்வரி தெரி வித்தார். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் காவலர் நண்பர்கள் குழு ஏற்கனவே செயல்பட்டு வரு கிறது. அந்த குழு தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிமுக விழா காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி பங்கேற்று, கல்லூரி மாணவர்களுக்கு காவலர் நண்பர்கள் குழுவின் பணிகள் குறித்த விளக்கங்களையும், கல்லூரி மாணவர்கள் காவல்துறையுடன் இணைந்து எவ்வாறு பாது காப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தார். இந்த விழாவில் அவர் பேசும்போது ‘காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கலைக் கல்லூரி, மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 8 மாணவிகள், 346 மாணவர்கள் என 354 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இந்தக் குழுவில் இணைந்துள்ள மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையையோ, டீ சர்ட்டையோ தவறாக பயன் படுத்தக் கூடாது. தவறாக பயன்படுத்துவது தெரிந்தால் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படும்.’ என்றார். இந்த விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், காவல் துறை துணை கண்காணிப் பாளர்கள் கலைச்செல்வம், அருள்மணி மற்றும் காவல்துறை ஆய்வாளர் கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.