tamilnadu

கடன்தொல்லை: மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம், மே 28- திருநெல்வேலியை சேர்ந்தவர் நெல்லையப்பன். காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை அருகே  பார்உரிமத்தை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தாக கூறப்படுகிறது. திருப்போரூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் இந்த பாரை நடத்தி வந்தார்.அந்த கடையின் உரிமையாளர் அவ்வப்போது வாடகையை உயர்த்தியதால் வட்டிக்கு கடன் வாங்கி வாடகை மற்றும் போலீஸாருக்கு மாமூல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடல் தொல்லை அதிகரித்துள்ளது.அடிக்கடி உயர்த்தப்படும்வாடகை உயர்வு தொடர்பாகமாமல்ல புரம் டிஎஸ்பி அலுவலகத்தில்  புகார் அளித்தபோது வாங்க மறுத்த தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் உடலில்பெட்ரோலை ஊற்றிதற்கொலை முயற்சித்திருக்கிறார். அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதற்கிடையே, நெல்லையப்பன் அவரது முகநூலில் வீடியோ காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், டாஸ்மாக் கடைகளில் பார் நடத்த உரிமம் பெற்றவர்கள் மேல் வாடகைவிட்டு  சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கிறார்கள்.  மேல் வாடகைக்கும் எடுப்பவர்கள் வாடகை உயர்வால் கடன் தொல்லையால் அவதிப்படுகிறார்கள். கேளம்பாக்கம், திருப்போரூர் பகுதிகளிலுள்ள பார்களில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டும் திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் வீட்டுக்கு காய் கறி முதல் ஏசி வரையில் வாங்கி தரவேண்டியுள்ளது. மாமல்லபுரம் டிஎஸ்பி. சுப்புராஜூ ஒரு கடைக்கு ரூ. 1.20 லட்சம் வரைக்கும் மாதம் மாமூல் பெறுகிறார். இந்த கடன் தொல்லையில் நான் சிக்கியுள்ள தால், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகம் அல்லது மாமல்ல புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளேன் என்று பேசியிருக்கிறார்.  இந்த வீடியோ காட்சி தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி.சந்தோஷ்ஹதிமானி கூறுகையில், “தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நெல்லையப்பனிடம் மாஜிஸ்திரேட் வாக்கு மூலம் பெற்றுள்ளார்.அந்த விவரங்களை பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிடைத்ததும் அந்த தகவலின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

;