tamilnadu

img

காஞ்சிபுரத்தில் மார்ச் 31 வரை பட்டு ஜவுளி கடைகள் மூடல்

காஞ்சிபுரம்,மார்ச் 21- கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள பட்டு சேலை விற்பனை கடைகள் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரில் பட்டுசேலை வாங்குவதற்காக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், அந்தமான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நேபாளம், அமெரிக்கா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் காஞ்சிபுரத்திற்கு வருகை தருகின்றனர். நகரில் பட்டு சேலைகள் அதிகம் விற்பனை செய்யப்படும்  பகுதிகளான நடுத்தெரு, சேக்குபேட்டை சாலியர் தெரு, காந்தி ரோடு போன்ற பகுதிகளில் உள்ள பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனை கடைகளுக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.  எனவே, இப்பகுதிகளில் உள்ள பட்டுஜவுளி கடைகளை மூட வேண்டும் என காஞ்சிபுரம் பெருநகராட்சி நகர்நல அலுவலர் முத்து தலைமையில் வணிக நிறுவனங்களுக்கு சனிக்கிழமையன்று (மார்ச் 21)நோட்டீஸ் அளிக்கப்பட்டது. கடைகளில் பட்டு சேலை வாங்க வந்த  வாடிக்கையாளர்களை கடையை விட்டு வெளியேற்றிய பிறகு கடைகளை மூடுவதை உறுதிப்படுத்திய  பிறகுதான் நகராட்சி  அலுவலர்கள் கிளம்பிச் செல்கின்றனர் என வணிகர்கள் கூறினர்.

;