tamilnadu

img

தேசிய நெசவாளர் விருது பெற்ற பெண்மணிக்கு சிஐடியு வாழ்த்து

காஞ்சிபுரம், அக். 28- மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவா ளர் விருதுக்கு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, கீதா  தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆக.,7, தேசிய கைத்தறி தினமாக கொண்  டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி, மத்திய அரசின் ஜவுளித்துறை, சிறந்த  கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்க ளுக்கு, தேசிய விருது மற்றும் சான்றிதழ் களை வழங்கி, கவுரவித்து வருகிறது.  இந்நிலையில், 2017க் கான சிறந்த கைத்தறி  நெசவாளர் விருதுக்கு, இந்திய அளவில், 11 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இதில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், சேர்மன் சாமிநாதன் தெருவைச் சேர்ந்த ஆர்.கீதா, 38, என்ற பெண், சிறந்த நெச வாளராக தேர்வாகி உள்ளார். இவர், திரு வள்ளுவர் பட்டு கைத்தறி சங்கத்தின் உறுப்பினர். மத்திய அரசின் தேசிய நெசவாளர் விரு துக்கு தேர்வு செய்யப்பட்ட கீதாவை சிஐ டியு மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமார், கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் ஜீவா,  சிபிஎம் காஞ்சி பெருநகர குழு செயலாளர் சி. சங்கர் மற்றும் சிஐடியு மாவட்ட  நிர்வாகி கள் ஜி எஸ் வெங்கடேசன், வி.வெங்கடேசன் மற்றும் சிபிஎம் நிர்வாகிகள் சிவக்குமார், சம்பத், சூர்யா, நாகவேலு மற்றும் கிளை நிர்வாகிகள் நேரில் சென்று சால்வை அணி வித்து பாராட்டு தெரிவித்தனர். அப்போது அவரது கணவர் உட்பட குடும்பத்தினர் உட னிருந்தனர்.