காஞ்சிபுரம், ஜூன் 30- காஞ்சிபுரம் அதன் சுற்றியுள்ள பகுதி களில் அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு நிவாரணத் தொகை கிடைக்காமல் மாற்றுத் திறனாளிகள் அவதிப்பட்டு வந்தனர். அரசு அறிவித்த நிவாரண தொகை ரூபாய் ஆயிரத்தை பெற்றுத் தருவதற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் தொடர் முயற்சி செய்தன. இதன்காரணமாக செவ்வாயன்று (ஜூன் 30) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் நேரடியாக சென்று குருவி மலை கிராமத்தில் 13 பேருக்கும், களக் காட்டூர் பகுதியில் 24 பேருக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணத்தை வழங்கினர். இந்நிகழ்வின் போது மாற்றுத்திறனாளி கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், சிவப்பிரகாசம், வேலு, முருகன் உடன் இருந்தனர்.