tamilnadu

23 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

காஞ்சிபுரம், மார்ச் 3- காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் வேலை செய்து வருவதாக துணை ஆட்சியர் சரவணனுக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் துணை ஆட்சியர் மற்றும் வரு வாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, விழுப்புரம் மாவட்டம், நெற்குணம் மற்றும் முன்னூர் கிராமங்க ளைச் சேர்ந்த குமார் (22),  பச்சையம்மாள் (23), மூர்த்தி (22),மாரியம்மாள் (20),  வேளியப்பன் (10), சந்திரன் (40),குப்பம்மாள் (36), அஜித் (22), விஜய் (8), கனகா (20), பொன்னி (21)  உட்பட  23 பேர் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது. இவர்களிடம் விசா ரணை நடத்தியதில், 3 ஆண்டு களுக்கு முன்பு வாங்கிய ரூ. 5 ஆயிரம் கடனுக்காக தொடர்ந்து செங்கள் சூளை வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களை விடுதலை சான்றிதழ் வழங்க துணை ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.  மேலும் இதுகுறித்து பாலுசெட்டிச்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.