tamilnadu

img

காவல் ஆய்வாளர் மீது புகார் கூறியவர் கைது விடுவிக்க மனைவி கோரிக்கை

கள்ளக்குறிச்சி. டிச, 17- கள்ளக்குறிச்சி நகரில்  மனித உரிமை ஆர்வலர் ஒரு வர் கள்ளக் குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் மீது லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தி  துண்டுப்பிரசுரம் வெளி யிட்டதையொட்டி அவர் திங்க ளன்று நள்ளிரவில் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்  பட்டுள்ளார். அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மனு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சியில் வரு வாய் ஆய்வாளராக பல ஆண்டு களுக்கு மேல் பணிபுரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் மீதும், நக ராட்சி ஆணையர் மீதும் பல்வேறு முறைகேடு புகார்கள் கூறி; அதன்மீது  நடவடிக்கை எடுக்காத மண்டல இயக்குனர் கொடும்பாவி எரிக்கும்  போராட்டத்திற்காக கள்ளக்குறிச்சி யில் மக்கள் உரிமை லஞ்ச ஒழிப்பு மற்றும் நுகர்வோர் பேரவையின் தலைவர் வே.ராமநாத அடிகள், செய லாளர் ஜி.பி.சௌந்தரராஜன் ஆகி யோர் அனுமதி கேட்டுள்ளனர்.  கடந்த 13.10.2019 அன்று மனு கொடுத்தும் காவல்துறையினர் எவ் வித தகவலும் தெரிவிக்கவில்லை. 24.10.2019 போராட்ட நாளன்று கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் போராட்டம் நடத்தச் சென்ற  நிர்வாகிகளை கைது செய்து பொய்  வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பிய தாக கள்ளக்குறிச்சி காவல்  ஆய்வாளர் விஜயகுமார் மீது புகார் கூறியுள்ளனர்.  மேலும் கள்ளக்குறிச்சி நகரில் சட்டவிரோத மதுபான பார்கள் நடத்த  அனுமதிக்கவும், கொலை, கொள்ளைகள் கூடுதலாகியுள்ளதை சுட்டிக்காட்டியும்; பேரவையின் சார்பில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். மேலும் ஆய்வா ளர் விஜயகுமார் மீது சிபிஐ விசா ரணை கோரியும், பல லட்சக்கணக்  கான ரூபாய்கள் கையூட்டு வாங்கி யுள்ளதாகக் கூறியும் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் திங்களன்று (டிச.16) நள்ளிரவில் இந்த அமைப் பின் தலைவரான ராமநாதஅடிகளின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அதன்  பின்னர் அடுத்த நாள் காலை அவரது  மனைவி காவல் நிலையத்திற்கு சென்று கணவரைப் பற்றி கேட்ட போது எங்களுக்கு தெரியாது என்று  கூறியதாகவும், அவரை எங்கு  வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை  எனவும் கூறப்படுகிறது. எனவே தனது  கணவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்து வருவ தாக தெரிகிறது.

;