கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள், கிராம துப்புரவு ஊழியர்கள் மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (மார்ச் 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.வீராசாமி, செயலாளர் ஏ.எஸ்.குமார், பொருளாளர் ஏ.மணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், போக்குவரத்து சங்க நிர்வாகி கங்காசலம், எல்ஐசி நிர்வாகி கே.வேலாயுதம், ஏ.அன்புதுரை, பி.விசாலாட்சி, எஸ்.பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.