மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (பிப்.18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எஸ்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிஐடியு கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், தலைவர் கே.விஜயகுமார், நிர்வாகிகள் கே.சலீம், இ.காமராஜ், ஆர்.ஏழுமலை ஆகியோர் பங்கேற்றனர்.