tamilnadu

img

வாலிபர் சங்கம் தலையீட்டால் குடிநீர்ப் பிரச்சனைக்கு தீர்வு

கள்ளக்குறிச்சி, ஜூன் 6- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சின்ன சேலம் வட்டக்குழு சார்பில் மாத்தூர் பஞ்சா யத்துக்குட்பட்ட கோவிந்தராஜ் நகரில் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக் கோரி  கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலரி டம் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 5) மனு அளிக்கப்பட்டது.      அந்த மனுவில், பழுதடைந்துள்ள  மினி டேங்க் மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் வழங்க வேண்டும், தெரு விளக்குகளை சீர மைக்க வேண்டும், மூடிக்கிடக்கும் நூல கத்தை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 6) மோட்டார் பழுது நீக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. தெரு விளக்குகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. பிற கோரிக்கைகள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுப்ப தாக நிர்வாகத்தின் தரப்பில் உறுதி அளிக் கப்பட்டுள்ளது.