tamilnadu

img

கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை அறிவிப்புகள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி, நவ. 13-  கடந்த ஜனவரி 8ஆம் தேதி சட்டமன்றத்தில் தமிழக  முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்  குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கி அறிவித்தார். இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூரை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் ஒருபுறம் போராட்டம் நடத்தி வந்தனர்.  

புதிதாக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லைகளையும், விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைகளை யும் குறிப்பிட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன்படி விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், வானூர், கண்டாச்சி புரம் மற்றும் திருவெண்ணைநல்லூர் 25, சித்திலிங்கமடம் 21, அரசூர் 24 என மொத்தம் 70 கிராமங்களை உள்ளடக்கிய மூன்று வருவாய் வட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள திருவெண்ணெய்நல்லூர் ஆகிய ஒன்பது வட்டங்களை உள்ளடக்கி விழுப்புரம் மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்திற்கு விழுப்புரம் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவி லூர், உளுந்தூர்பேட்டை மற்றும் தற்போது கல்வராயன்மலை 18, வெள்ளிமலை 26 என 44 கிராமங்களை உள்ளடக்கி புதிதாக  உருவாக்கப்பட்டுள்ள கல்வராயன்மலை ஆகிய 6 வட்டங்  களை உள்ளடக்கி கள்ளக்குறிச்சி மாவட்டமும் அறிவிக்கப்  பட்டுள்ளது. இம்மாவட்டத்திற்கு கள்ளக்குறிச்சி தலைநக ராக அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டங்கள் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஆளும் அதிமுகவை சேர்ந்த வர்களும், அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பட்டாசு  வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

;