கள்ளக்குறிச்சி, பிப்.13- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் 2019 - 2020ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு போட்டிகள் வரு கின்ற 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் கள்ளக் குறிச்சி ஏகேடி கல்வி குழும வளாகத்தில் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சியர் கிரண்குரலா தெரிவித்துள்ளார். 1.1.95 அன்றோ அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க இயலும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிப் பதற்கான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று, புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச்சான்று, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றின் நகல்களை போட்டி நடைபெறுவதற்கு முன் பாக போட்டி நடத்துபவர்களிடம் அளிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகள் குறிப்பிட்ட தினங்களில் சரியாக காலை 9 மணிக்கு துவங்கும். தாமதமாக வரும் வீரர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 19ஆம் தேதியன்று ஆண், பெண்க ளுக்கான கபடி, வாலிபால், ஹாக்கி, கூடைப் பந்து, இறகுப்பந்து போட்டிகளும், 20ஆம் தேதி ஜூடோ, குத்துச்சண்டை போட்டிகளும், 21ஆம் தேதி 100, 200, 400 மீட்டர் தடை தாண்டு தல், 1500 மீட்டர் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோல் ஊன்றி தாவுதல், நீளம் தாண்டுதல், 10,000 மீட்டர் ஆண்கள், 800, 500 மீட்டர் பெண்கள் ஆகிய தடகளப் போட்டிகளும் நடைபெற உள்ளன. www.sdat.tn.govt.in என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் வருகிற 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுபவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மாவட்ட அளவிலான குழு, தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெறு பவர்களுக்கு முதல் பரிசு ரூ1,000, இரண் டாம் பரிசு ரூ 750, மூன்றாம் பரிசு ரூ, 500 காசோலையாக வழங்கப்படும். இவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர், கைபேசி எண்கள் 9943509394, 86757 73551, 7401703485 மூலம் தொடர்பு கொள்ள லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.