tamilnadu

img

சிஐடியு நிர்வாகி அண்ணாமலை மறைவு

கள்ளக்குறிச்சி,மார்ச் 23-  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கள்ளக் குறிச்சி மாவட்ட துணைத் தலைவரும், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான அண்ணாமலை உடல் நலக்குறைவால்  சனிக்கிழ மையன்று (மார்ச் 21) கால மானார். அவருக்கு வயது (58)  கட்டுமான தொழிலாளி யாக இருந்து, சிஐடியு மற்றும் கட்டுமான தொழி லாளர் சங்கத்தில் உறுப்பின ராக சேர்ந்து, பின்னர் அப்பகுதி தொழிலாளர்க ளின் மேம்பாட்டிற்காக சிஐடியுவில் பகுதிநேர ஊழியராக பணியாற்றியவர் அண்ணாமலை. சிஐடியு தொழிற் சங்கத்தின் தலைவ ராகவும் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பின ராகவும் இருந்தவர். அன்னாரின் மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன், பி.சுப்பிரமணியன், எம்.ஆறு முகம், டி.எம்.ஜெய்சங்கர், ஏ.வி.ஸ்டாலின்மணி, எம்.செந்தில், ஆர்.சீனிவாசன், டி.எஸ்.மோகன், கள்ளக்குறிச்சி இடைக்குழுச் செயலாளர் பி.மணி மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள், சகோதர வெகுஜன அரங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் மலர் வளையம் வைத்தும், செங்கொடி போர்த்தியும் அஞ்சலி செலுத்தினர்.  கள்ளக்குறிச்சி வட்டம் குடியநல்லூரைச் சேர்ந்த கண்ணன், அம்சவள்ளி ஆகியோரின் மகனான அண்ணாமலைக்கு  அல மேலு என்ற மனைவியும், அம்மு, அம்சா ஆகிய மகள்களும், உமாநாத் என்ற பொறியியல் பயின்ற மகனும் உள்ளனர்.