tamilnadu

img

எடியூரப்பா முதல்வராக பாஜகவுக்குள் எதிர்ப்பு?

பெங்களூரு:
கர்நாடக மாநிலத் தில், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சிகவிழ்ந்துள்ள நிலையில்,அங்கு புதிய ஆட்சியமைக்கும் முனைப்பில் பாஜக தலைவர் எடியூரப்பா தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில், பாஜகவே ஆட்சியமைத்தாலும் எடியூரப்பா முதல்வராகக் கூடாது என்று அம்மாநில பாஜக-வினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எடியூரப்பா மீது, சுரங்கஊழல் உள்ளதால் அவருக்குபதிலாக வேறொருவரை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக-வினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், எதிர்ப்பாளர்களை ‘சரிக்கட்டி’ எப்படியாவது மீண்டும் முதல்வராகி விடுவதில் எடியூரப்பா உறுதியாக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி, இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்பதே பெரும்பாலான கர்நாடகா பாஜக தலைவர்களின் விருப்பம். இருப்பினும் கட்சியின் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும்” என்று பட்டும் படாமல் கூறியுள்ளார்.

;