tamilnadu

img

கர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களுக்கு தடை!

ஓலா கேப்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வாடகை கார் சேவை வழங்குகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், ஓலா கேப்ஸ் நிறுவனம் அனுமதியின்றி பைக் டாக்ஸிகளை இயக்கி வருகின்றது. மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பானதாகும். மேலும், இந்த சேவையை எவ்வித அறிவிப்புமின்றி செயல்படுத்தி வருவதாக தகவல் வெளியானது.  


எனவே, கர்நாடக போக்குவரத்து துறை ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கையாக ஓலா நிறுவனத்தில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் 6 மாதங்களுக்கு கர்நாடகா முழுவதும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓலா ஓட்டுனர்கள் தங்கள் ஓட்டுனர் உரிமங்களை போக்குவரத்து துறையிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


;