tamilnadu

img

சரிபாதி பஞ்சாபியர்க்கு மட்டுமல்ல எனக்கும் பிறப்புச் சான்று இல்லை.... சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் முதல்வர் அம்ரீந்தர் சிங் பேச்சு

சண்டிகர்:
முதல்வரான தனக்கு மட்டுமன்றி, சரிபாதி பஞ்சாபியர்களுக் கும் பிறப்புச் சான்றிதழ் இல்லை எனும்போது, எங்களால் குடியுரிமையை எப்படி நிரூபிக்க முடியும்? என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ளகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்குஎதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ள நிலையில், சண்டிகரில்எதிர்ப்புக் கூட்டமும் நடைபெற்றது. இதில் முதல்வர் அம்ரீந்தர் சிங் பங்கேற்றுப் பேசியிருப்பதாவது:

“மத்திய அரசு கொண்டு வந் துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம்,என்பிஆர், என்ஆர்சி ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. பஞ்சாப் மாநிலத்தில் இருக் கும் மக்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கிருந்து வந்தவர்கள்.குடியுரிமையை நிரூபிக்க மக்கள்அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ்தேவை என்றால், இந்த மக்கள் அனைவரையும், பிறப்புச் சான்றிதழ் பெறுதற்கு பாகிஸ்தான் செல் லுங்கள் என்று மத்திய அரசு கூறப் போகிறதா?
அப்படிப் பார்த்தால் எனக்குமட்டுமல்ல, பஞ்சாப் மாநிலத்தில் பாதி மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. அவ்வாறு எனக்கோ, என்மாநில மக்களுக்கோ பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால், என்பிஆரில் சந்தேகம் என்று முத்திரை குத்துவார்களா?எனவே, சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சி ஆகிய மூன்றையுமே என்னுடைய அரசு முழுமையாக எதிர்க்கிறது. இவை மூன்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு மாநிலத்தில் நடக்கும். ஆனால்,மதம், சாதி, இனம் வாரியாக கணக்கெடுப்பு நடக்காது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு இந்தச் சட்டங்கள்,ஆவணங்கள் மூலம் எதை நிரூபிக்க முயல்கிறது? இந்தியாவுக்காகப் போரில் சண்டையிட்ட பல ராணுவ வீரர்கள் குடியுரிமையை இழக்க வேண்டுமா? கடந்த 72 ஆண்டுகளாக இந்ததேசம் பன்முகத்தன்மை கொண்டநாடாக இருக்கிறது. பல்வேறு மதங்கள், சாதிகள், இன மக்கள் ஒன்றாக வாழ்ந்து அரசியலமைப்பின் உண்மையான மகத்துவத்தை, முகவுரையை உணர்த்துகிறார்கள். ஆனால் திடீரென நாட்டைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். மக்களின் எதிர்வினை குறிப்பாக இளைஞர்களின் கோபம் இந்தச் சட்டம் செல்லாது என்பதைத்தான் காட்டுகிறது.”இவ்வாறு அம்ரீந்தர் சிங் பேசியுள்ளார்.
 

;