சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (வயது 69) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கர்நாடகா மாநிலம் பந்த்வால் அருகே உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் புகழ்பெற்று விளங்கினார். தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
கடந்த சில மாதங்களாக கத்ரி கோபால்நாத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இன்று சிகிச்சை சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.கர்நாடகாவின் பாதவிங்கடி என்ற இடத்தில் கத்ரி கோபால்நாத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.