tamilnadu

img

24 மணிநேரத்தில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா...  இந்தியாவின் மொத்த பாதிப்பு 17 லட்சத்தை கடந்தது... 

தில்லி 
ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த 2 மாத காலமாக மின்னல் வேகத்தில் உள்ளது. இதனால் குறுகிய காலத்தில் உலகின் கொரோனா பாதிப்பு அட்டவணையில் டாப் - 3 க்கு முன்னேறியது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 61,957 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 17 லட்சத்தை (17.01 லட்சம்) நெருங்கியுள்ளது.  மேலும் 797 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,551 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதய நிலவரப்படி (மதியம் 2 மணி)  36,554 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10.96 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்னும் 5.67 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, ஆந்திரா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட மாநிலங்கள் தான் இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நிர்ணயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

;