tamilnadu

img

எனது தோல்விக்கு யாரையும் காரணம் சொல்ல மாட்டேன் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேட்டி

பெங்களூரு:
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியை (தனது பேரனை) நிறுத்தும் நோக்கம் இருக்கவில்லை. ஆனால் மண்டியாவை சேர்ந்த எங்கள் கட்சியின் நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்ததால் அவரை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

துமகூரு மக்களவைத் தொகுதியில் எனது தோல்விக்குயாரையும் காரணம் சொல்ல மாட்டேன். யாரையும் குறிவைத்து பேசுவது சரியும் அல்ல. தோல்வி அடைந்த பிறகு அதுபற்றி விவாதிக்கக்கூடாது. நான் தற்போது, கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.ஊடகங்கள் மீது முதல்வருக்கு ( தனது மகனுக்கு) சிறிது கோபம் உள்ளது. வரும் நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்.காங்கிரஸ் - ஜனதாதளம் கூட்டணி அரசு அமைந்தது முதல்,ஊடகங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றவருத்தம் அவருக்கு இருக்கிறது. கிராம தரிசனத்தின் போது, முதல்வர் இதுபற்றி செய்தியாளர்கள் மத்தியில் பேசுவார். இவ்வாறு தேவகவுடா கூறியுள்ளார்.

;