கரூர், மார்ச் 10- சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கரூர் வட்டாரக்குழு சார்பில் வாங்கப் பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்க நிர்வாகி எஸ்.டெய்சிராணி தலைமை வகித்தார். நமாக்கல் மகிழ்ச்சி மன்ற தலைவர் அருள்நிதி ஸ்ரீராஜேந்திரன் பேசினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணை செயலாளர் ஆ.தமிழரசி, வட்டார நிர்வாகிகள் ஜெயமணி, சுபா, அம்ச வள்ளி, ஏஞ்சல் கிளப்பின் வளர்ச்சித் தலைவர் நீலாவதி, கரூர் மாவட்ட தலைவர் கவிதா பேசி னர். இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. வட்டார நிர்வாகி பானுமதி நன்றி கூறி னார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.