tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

 கரூர், ஆக.17- கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி போட்டப்பனூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜாவை படுகொலை செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற செயலை வன்மையாக கண்டிப்பதுடன், கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  டாஸ்மாக் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கரூர் மாவட்ட அனைத்து டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன் கண்டன உரையாற்றினார். சிஐடியு டாஸ்மாக் சங்க மாவட்டத் தலைவர் பத்ம ஸ்ரீகாந்தன், சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் ராஜதுரை, சுரேஷ், ராஜேஷ் கண்ணன், கண்ணப்பன், ராஜ் மோகன், ராஜா பேசினர். சிஐடியு டாஸ்மாக் சங்க மாநில குழு உறுப்பினர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மதுபான கடைகள் மூடப்பட்டன. கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.